Toronto District School Board
Toronto District School Board

Permits

அனுமதிச் சீட்டுகள்

TDSB கல்விச் சபையின் இடவசதிகள் பாடசாலை நடவடிக்கைக்ளுக்காகப் பயன்படாத நாட்களில் அவற்றைச் சூழ்ந்த சமூகத்தின் துடிப்புள்ள ஒரு பகுதியாக வருடம் முழுவதும் செயற்படுகின்றன. பாடசாலை உபயோகத்துக்கு இடம் பயன்படாத நாட்களில் எமது வகுப்பறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் திறந்த வெளிகள் ஆகியன நூற்றுக் கணக்கான நிறுவனங்களும் முகவர் நிலையங்களும் பயன்படுத்துவதற்கு திறந்து விடப்படுகின்றன. இதற்காக வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகள் (Permits), இடவசதி மற்றும் மூலவளங்கள் ஆகியன கிடைக்கும் அளவினைப் பொறுத்து, முந்தி வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அங்கீகாரம் பெறுகின்றன. முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள ஒரு கட்டண அட்டவணையின் பிரகாரம் கட்டணங்கள் இதற்கு வசூலிக்கப்படுகின்றன.

கொள்கை P.011 – பாடசாலைச் சபையின் இடவசதியினை சமூகத்தினர் பயன்படுத்தல் (அனுமதிச் சீட்டுகள்)

PR666 - பாடசாலைச் சபையின் இடவசதியினை சமூகத்தினர் பயன்படுத்தல் (அனுமதிச் சீட்டுகள்)

இடவசதியின் வகைகள்

  • பாடசாலைகள்
  • விளையாட்டு மைதானங்கள்
  • நீச்சல் குளங்கள்

உயர்தரமான ஒரு சேவையை வழங்குவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம். எமது சேவை பற்றிய உங்கள் கருத்துக்களை நாம்அறிய விரும்புகிறோம். தயவு செய்து எமது மீள்தரவுப் படிவத்தை நிரப்பி எப்படி எமது சேவை உள்ளது என்று எங்களுக்கு அறியத் தாருங்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல் யாவும் அந்தரங்கமாக வைத்திருக்கப்படும்.

மீள்தரவுப் படிவம்சேவையின் தரம்

இடவசதி வழங்கும் சேவைகள் அனுமதிச் சீட்டு பிரிவுதொடர்புத் தகவல்:

தொலைபேசி: 416-395-7666

தொலை நகல்: 416-395-8062

 மின்னஞ்சல்: permits@tdsb.on.ca

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL