Toronto District School Board
Toronto District School Board

Newcomer

புது வரவாளர்கள்  

கனடாவுக்கு உங்கள் வருகை நல்வரவு ஆகட்டும்! TDSB பாடசாலைச் சபை பல்லின இயல்பு உடையது. ஒவ்வொரு வருடமும் எமது பாடசாலைகளில் நாட்டுக்குப் புதியவர்களான ஆயிரக்கணக்கான மாணவர்களை எல்லா வயதிலும் உள்ளவர்களைநாம் வரவேற்று சேர்த்துக் கொள்ளுகிறோம்.

ஆரம்பநிலைப் பாடசாலைகளிலும் உயர்பாடசாலைகளிலும் சேர்பவர்கள் வேறு பல்வகைக் கலாச்சாரங்களை அறிந்து கொள்கின்றனர்; புதிய பார்வைகளை வளர்த்துக் கொள்கின்றனர்; புதிய நண்பர்களைச் சந்திக்கின்றனர்; அதே சமயம் முதல் தரமான கல்வியையும் பெற்றுக் கொள்கின்றனர். இம்மாணவர்களுக்கு நாங்கள் நம்பகவாலோசகர் முறையிலான(mentorship) பல திட்டங்களை வழங்குவதுடன், எமது பணியாளர்களும் எப்பொழுதும் அவர்களுக்கு விருப்பத்துடன் ஆதரவு வழங்கவும் தயாராக உள்ளனர்.

புதிதாக நாட்டுக்கு வந்த வயது வந்த நபர்களுக்கு நாங்கள் மொழிபெயர்ப்பு உரையாடல் வசதி மற்றும் மொழிபெயர்ப்பு பிரதியாக்கச் சேவை ஆகியவற்றை இருபத்தைந்துக்கும் அதிகமான மொழிகளில் வழங்குவதுடன், தொழில் வாய்ப்புச் சேவைகள் மற்றும் தொழில்முறைத் திட்டமிடல், திறன் விருத்தி, தொழில்முறைப் பயிற்சி, மொழிக்கல்வி மற்றும் விரிவான விசேடித்த மொழிப்பயிற்சி ஆகியவற்றையும் கொடுக்கிறோம்.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL