Toronto District School Board
Toronto District School Board

Kindergarten Registration

பாலர் வகுப்புக்கு பதிவு செய்தல்   

கனிஷ்ட பாலர் வகுப்பு

உங்கள் பிள்ளை  2014 டிசம்பர் 31ம் திகதி அல்லது அதற்கு முன்பாக நான்கு வயதினை எட்டி விடுவாரானால் அவர் 2014 செப்ரெம்பர் மாதத்தில் கனிஷ்ட பாலர் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கலாம். 

சிரேஷ்ட பாலர் வகுப்பு

உங்கள் பிள்ளை  2014 டிசம்பர் 31ம் திகதி அல்லது அதற்கு முன்பாக ஐந்து வயதினை எட்டி விடுவாரானால் அவர் 2014 செப்ரெம்பர் மாதத்தில் சிரேஷ்ட பாலர் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கலாம். 

பதிவு செய்வது எப்படி

 TDSB பாடசாலைச் சபையின் பாலர் வகுப்புக்கான திட்டங்கள் யாவற்றுக்கும் பதிவு செய்வது பெப்ருவரி மாதத்தில் ஆரம்பிக்கிறது. உங்களையும் உங்கள் பிள்ளையையும் சந்தித்து வரவேற்கும் நாளை நாம் எதிர்பார்த்து இருக்கிறோம்!

படிமுறை 1 – உங்கள் உள்ளூர் பாடசாலையைக் கண்டு பிடியுங்கள்.

படிமுறை 2 - உங்கள் உள்ளூர் பாடசாலைக்கு வருகை தாருங்கள். வரும்பொழுது பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வாருங்கள்:

  • வயதுக்கான அத்தாட்சி (பிறப்புச் சான்றிதழ் அல்லது கடவுச் சீட்டு)
  • முகவரிக்கான அத்தாட்சி (உங்கள் முகவரியினைக் காட்டுகின்ற இரண்டு அடையாளச் சின்னங்கள் - உதாரணம்: தொலைபேசிக் கட்டணத் துண்டு)
  • தடுப்பூசி பெற்றதற்கான அத்தாட்சி (உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளின் பட்டியலைக் காட்டும் அட்டை)
  • உங்கள் பிள்ளை கனடாவில் பிறக்கவில்லை என்றால் கனடாவுக்கு அவர் வந்து சேர்ந்த திகதி பற்றிய உறுதிப்பாடு: நிரந்தர வதிவாளர்களாக அல்லது அகதிநிலைக் கோரிக்கையாளர்களாக உள்ள குடும்பங்கள் நேரடியாகப் பாடசாலைக்குச் சென்று பதிவுசெய்து கொள்ள முடியும். குடிவரவு அந்தஸ்து எதுவும் இல்லாத பிள்ளைகளும் எமது பாடசாலையில் ஏற்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் குடும்பங்களைப் பற்றியோ தகவல் எதுவும் குடிவரவு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறான பிள்ளைகளைப் பதிவு செய்வதற்கு, தயவுசெய்து 5050 யொங் வீதி, ரொறொன்ரோ, என்ற முகவரியில் அமைந்துள்ள சர்வதேச கல்வித் திட்டங்கள் மற்றும் அனுமதிக்கான காரியாலயத்துக்கு (International Programs and Admissions Office) சென்று TDSB பாடசாலைச் சபைக்கான அனுமதிக் கடிதம் ஒன்றினைப் பெற்றிடுங்கள்.

தயவுசெய்து கவனிக்கவும்: ஒரு பிள்ளையின் பெற்றோர்கள் அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள் மட்டுமே அப்பிள்ளையை TDSB கல்விச் சபையின் திட்டங்களில் பதிவு செய்ய முடியும்.

மேலதிக தகவல்

உங்கள் பிள்ளையைப் பாடசாலைக்கென வீட்டில் ஆயத்தம் செய்வதற்கான தகவல் துணுக்குகள் உட்பட TDSB பாடசாலைச் சபையின் பாலர்வகுப்புத் திட்டங்கள் பற்றி மேலதிகமாக அறிந்து கொள்வதற்கு, இணையத் தளத்தில் உள்ள பாலர்வகுப்பு இணைப்புகள் மற்றும் மூலவளங்கள் பகுதிக்குச் சென்று பாருங்கள்.

உங்கள் முகவரிக்குரிய பகுதிக்குச் சேவை வழங்கும் பாடசாலையை விட வேறு ஒரு பாடசாலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பமா? விருப்பமான பாடசாலைக்குச் செல்லுதல்  (Optional Attendance) பற்றி இணையத் தளத்தில் படியுங்கள்.

எமது ஆரம்பநிலை அமிழ்ந்த அறிவுப் பிரெஞ்சு மொழித் திட்டங்கள்(Early French Immersion programs) பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மாணவர்களைப் பதிவு செய்வதற்கெனக் குறித்த பதிவுத் திகதிகள் மற்றும் நேரங்கள் பற்றி அறிவதற்கு தயவு செய்து உங்கள் உள்ளூர் பாடசாலையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL