Toronto District School Board
Toronto District School Board

Home Tips

பாலர் வகுப்புகள்

TDSB இல்

வீட்டுக் குறிப்புகள் : பாடசாலைக்கு ஆயத்தம் செய்தல்

பாடசாலையினை ஆரம்பிக்கும் கட்டமானது உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் ஒரு குதூகலமான காலகட்டம் என்பதோடு அது உங்கள் பிள்ளை முதல் முதலாகச் செய்யப்போகும் செயல்களில் ஒன்றாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. Toronto District School Boardஇன் ஆசிரியர்கள் பாடசாலையில் பிள்ளைகளின் வெற்றியினை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு பிள்ளையுடனும் செயற்பட்டு உழைக்கின்றனர்.

பாடசாலை ஆரம்பமானது ஒரு நேர்மறையான வெகுமானம் அழிக்கக்கூடிய அனுபவமாக அமைவதற்கு நீங்கள் பல விடயங்களை வீட்டில் செய்யலாம் . உங்கள் பிள்ளை புதிய செயல்களையும் அனுபவங்களையும் செய்வதற்கு ஊக்குவித்தல், கேள்விகள் கேட்டல் மற்றும் கேள்விக்குப் பதில் அளித்தல் போன்றவை மூலம் பாடசாலையில் உங்கள் பிள்ளையினது வெற்றிக்கு வேண்டிய திடமான அத்திவாரத்தினை அமைக்க நீங்கள் உதவுகின்றீர்கள்.

பாடசாலையின் முதல் நாள் ஆரம்பிப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையுடன் பாடசாலைக்கு வந்து பார்ப்பதன் மூலம் பாடசாலைக்கு வந்து போகும் வழி, பாடசாலைக் கட்டிடம், பாடசாலைச் சூழல் போன்றவை பழக்கப்பட்டவையாக அமைகிறது.

பாடசாலை அனுபவத்திற்கு தயார் செய்ய சில ஆலோசனைகள்

பாடசாலையில் பிள்ளைகள்: வீட்டில் நீங்கள் செய்யக்கூடியவை:

புதிய ஆட்களையும் சூழ்நிலை களையும் சந்திப்பர்.

புதிய ஆட்களைச் சந்திக்க உங்கள் பிள் ளையை புதிய சூழ்நிலைகளுக்கு ஈடுபடுத்துங்கள்.(உ-ம். TDSB இன் பெற்றோரிய மற்றும் குடும்ப நிலையங்க ளுக்கு அல்லது நூலகத்தில் நடக்கும் கதை சொல்லும் நேரத்திற்குச் செல்வது)

தேவைகளை ஏனைய பிள்ளைக ளுக்கும் வயது வந்தோ ருக்கும் தெரிவிப்பர்.

தனது தேவைகளுக்கு உங்கள் பிள்ளை மொழியைப் பாவிக்கவும் (உ-ம். கழிவறையைப் பாவித்தல் ,குடிக்கப் பானம் அருந்துதல்). பிரச்சனைகளத் தீர்ப்பதற்கும் (உ-ம். மற்றவர்களுடன் பகிரும் பொழுது ) ஊக்கப்படுத்துங்கள் .

வெளியில் விளையாடப் போகும் பொழுதும் வீட்டுக்குச் செல்லும் பொழுதும் தாங்களே உடுப்பினைப் போடுவர் .

உங்கள் பிள்ளை தன்பாட்டில் உடுத்திக் கொள்ள ஊக்கமளியுங்கள் ( உ-ம். கைப்பகுதியுள்ள புற மேலாடை . காலணிகள் அல்லது பனிகாலத்தில் போடும் காற் சட்டைகள்)

தெரிவுகளைச் செய்வர் ( உ-ம் .வகுப்பறைச் செயற்பாடுகள் .பாவிக்க வேண்டிய பொருட்கள் )

உங்கள் பிள்ளை தெரிவுகளை மேற்கொள்ள உதவுங்கள் ( உ-ம். எந்த உடுப்புப் போடுவது, என்ன நடவடிக்கை களைச் செய்வது )

ஏனைய பிள்ளைகளுடன் பொருட்களையும் இடத்தையும் பகிர்வர்

ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து பழகவும் பகிரவும் மற்றும் தனது முறை வரும் வரை காத்து நிற்கவும், வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்

வகுப்பறையினதும் பாடசாலை யினதும் நடைமுறை ஒழுங்கை அறிதல். பொருட்களுக்கும் தங்களது உடமைகளுக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பர்.

வழிகாட்டும் அறிவுரைகளைக் கேட்பதற்கும் எதிர்பார்ப்பதை செய்து முடிப்பதற்கும் உங்கள் பிள்ளைக்கு ஊக்கமளியுங்கள் .ஒரு சில பொறுப்பு க்களை ஏற்பதற்கு உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்.( உ-ம். தனது விளயாட்டுப் பொருட்களையும் உடமைகளையும் அதற்கு உரிய இடத்தில் வைத்தல் )

கதைகள் ,கவிதைகள் மற்றும் தகவல் என்பவற்றினை கேட்டல் .தானாகவும் மற்றவர்களுடனும் சேர்ந்து புத்தகங்களைப் பார்த்து அதைப்பற்றிக் கதைத்து வாசிக்கவும் ஆரம்பிப்பர் .

உங்கள் மொழியில் கதைகளைக் கூறுங்கள் கவிதைகளைச் சொல்லுங்கள் . பாட்டுக்க ளைப் பாடுங்கள் .உங்கள் பிள்ளைக்கு வாசித்து ,படங்கள் எண்ணங்கள் மற்றும் சொற்கள் பற்றிப் பேசுங்கள். உங்கள் வீட்டிலும் சமூகத்திலும் காண்கின்ற சின்னங்கள் .சொற்கள் மற்றும் எண்கள் பற்றிப் பேசுங்கள்.நூலகத்திற்கு ஒன்றாகச் செல்லுங்கள்.

வயது வந்தோரும் ஏனைய சிறுவர்களும் வெவ்வேறு தேவைகளுக்கு எழுதுவதைப் பார்த்தல் .வரைவதற்கும் தங்களின் எண்ணங்களை எழுதுவதற்கும் கிரையோன் ,மர்க்கர் மற்றும் பென்சில் போன்ற பொருட்களைப் பாவிப்பார்கள் .

வீட்டில் தினமும் நடைபெறுகின்ற நடவடிக்கைகள் பற்றி வரையவும் எழுதவும் உங்கள் பிள்ளையை ஈடுபடுத்துங்கள் ( உ-ம். வாழ்த்து மடல்கள் செய்தல். தனது பெயரினை எழுதுதல். படம் வரைதல்) உங்கள் பிள்ளை வரையும் போதும் எழுதும் போதும் புகழ்ந்து கூறுங்கள். உங்கள் பிள்ளையின் பெயரைப்பற்றியும் பெயரில் உள்ள எழுத்துக்கள் பற்றியும் பேசுங்கள் .

அவர்களைச் சுற்றி உள்ள உலகின் இயற்கை பற்றி ஆய்வு செய்து அவர்கள் பார்ப்பதைப் பற்றியும் படிப்பதைப் பற்றியும் உரையாடுவர்.

வெளியிலும் மற்றும் உங்கள் சமூகத்திற்கு நடந்து செல்லும் பொழுதும் பார்க்கின்ற கேட்கி ன்ற விடயங்களைப் பற்றி உங்கள் பிள்ளையுடன் உரையாடுங்கள். பொருட்களை சுட்டிக்காட்டுங்கள். (உ-ம். காலநிலை மாற்றங்கள், காலங்கள் அல்லது இடங்கள் ).

எண்ணங்கள் ,வடிவங்கள் மாதிரிகள் அண்ணளவாய் மதிப்பீடு செய்தல், மற்றும் அளத்தல் போன்றவற்றினைக் கற்றல் .அவர்கள் தங்களின் எண்ணங்கள் பற்றியும் மற்றும் தாங்கள் என்ன கற்கின்றனர் என்பதைப்பற்றியும் பேசுவர்.

வீட்டிலும் வெளியிலுமுள்ள எண்கள் ,வடிவங்கள் மற்றும் மாதிரிகளைப் பற்றிப் பேசுங்கள். விளையாட்டுகளை சேர்ந்து விளையாடுங்கள். (பொருந்துதலும் எண்ணுதலும், ஆட்டச்சீட்டுகள்,எளிதான பலகை விளையாட்டுகள்).சமைக்கும் பொழுது தேவையான சமையற் பொருட் களை அளப்பதற்கு ஈடுபடுத்துங்கள்(உ-ம். விளையாட்டுப் பொருட்கள் ,உடைகள் மளிகைப் பொருட்களை எடுத்து வைத்தல் )

கலையினை உருவாக்கி கலைப் பொருட்களை ஆய்வு செய்து பிரயோகிப்பர்.கட்டமைப்புகளை அமைத்தது, இசை ,நாடகம் மற்றும் அசைவு நிகழ்வுகளில் பங்கெடுப்பர்.

வரைதல், கட்டுதல், பாடுதல், இசைக்கேற்ப அசைதல் மற்றும் கதைகளை நடித்தல் போன்றவை மூலமாக உங்கள் பிள்ளையின் கற்பனைத் திறனையும் வளர்க்க ஊக்கப்படுத்துங்கள்

பெரிய மற்றும் சிறிய தசைகளின் வளர்ச்சிக்காக பலதரப்பட்ட பொருட்களையும் மற்றும் உபகரணங்களையும் பாவிப்பர்.

உங்கள் பிள்ளை பெரிய தசைகளைப் பாவித்தும் ( உ-ம். ஓடுதல், ஏறுதல், பந்துடன் விளையாடுதல் ) சிறிய தசைகளைப் பாவித்தும் (உ-ம். கிரையோன் அல்லது மார்க்கர் ,, பிசைந்த மாக்கழி புதிர்கள் அல்லது விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றினைப் பயன்படுத்தல் ) உடற்பயிற்சி செய்வதற்குச் சந்தர்ப்பங்கள் கொடுங்கள்.

நீங்கள் உங்கள் பிள்ளைக்கு மிகவும் முக்கியமான ஒரு ஆசிரியர்

அடுத்த கல்வி ஆண்டிலும் இனி வரும் ஆண்டுகளிலும் உங்களுடனும் உங்கள் பிள்ளையுடனும் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட Toronto District School Board ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றது.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL