Toronto District School Board
Toronto District School Board

High School

உயர்பாடசாலை   

TDSB பாடசாலைச் சபையில் ஓர் உயர்பாடசாலை மாணவர் என்ற முறையில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு மிகப்பல வகையான பாடசாலைகள், கல்வித் திட்டங்கள் மற்றும் பாடநெறித்திட்டங்கள் ஆகியவற்றை அணுகிப் பெறக்கூடியதாக உள்ளது. ஆபிரிக்க கலாச்சாரத்தை மையமாகக் கொண்டதும் விசேடமானதும் ஆகிய கலைத் திட்டங்கள் தொடக்கம் தொழில்நுட்பவியல் மற்றும் உடற்பயிற்சி நெறி வரையில், நாம் ஒவ்வொரு மாணவருக்கும் பொருத்தமான ஏதோ ஒன்றை வழங்க முடிகிறது. உயர்பாடசாலையிலும் அதன் பின்பும் உங்களுக்கு வெற்றியீட்டித் தரக் கூடிய சரியான ஒரு பாதையை நீங்கள் கண்டறிய நாங்கள் உதவமுடியும்.

வகுப்பறைக்கு வெளியேயும் நீங்கள் ஈடுபடக்கூடியதாகப் பல திட்டங்களுக்குரிய வாய்ப்புக்கள் இங்கு உள்ளன.  தலைமைத்துவம் மற்றும் தொண்டர் பணி தொடக்கம் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சங்கங்கள் வரையில் இவ்வாறான வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள்உயர் பாடசாலை அனுபவத்தின் வெற்றி உங்கள் கையில் உள்ளது. TDSB கல்விச் சபையில் ஒவ்வொரு தனிப்பட்ட மாணவரும் அவரவரின் ஆர்வத் துறையினை அடையாளம் கண்டு அவ் வழியில் முன்னேறும் வாய்ப்பினை நாம் வழங்குகிறோம்.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL