Toronto District School Board
Toronto District School Board

Health and Physical Education Curriculum

ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சிக் கல்விக்கான புதுப்பித்த பாடத் திட்டம்

மாகாணக் கல்வி அமைச்சு 2015 பெப்புருவரி மாதத்தில் ஒன்ராறியோவில் உள்ள சகல பாடசாலைச் சபைகளுக்கும் என்று ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சிக் கல்விக்கான புதுப்பித்த பாடத் திட்டத்தினை (revised Health and Physical Education curriculum) வெளியிட்டு இருந்தது. இப்பாடத் திட்டத்தினைப் பாடசாலைச் சபைகள் 2015 செப்ரெம்பர் மாதம் தொடங்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுநலன் ஆகியவற்றுடன் தொடர்பு பட்ட தற்காலப் பிரச்சினைகளுக்கு விடைகாணும் விதத்திலும், ஒன்ராறியோவில் வளர்ந்து வரும் பல்லின மக்கள் தொகையினை மேலான முறையில் பிரதிபலிக்கும் விதத்திலும், இப்பாடத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் புதுப்பிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் ஆரோக்கியமான உறவுகள், மனச் சம்மதம், உளநிலை ஆரோக்கியம் மற்றும் இணைய உபயோகப் பாதுகாப்பு ஆகியன பற்றிய தகவல் அடங்கி உள்ளது.

TDSB பாடசாலைச் சபை, கல்வியைப் பெறுகின்ற ஒவ்வொரு மாணவரின் வெற்றி மற்றும் பாதுகாப்பினையும் உறுதி செய்வதில் முனைவாக ஈடுபட்டு வருகிறது. எமது பாடசாலைகளில் நாம் கற்பிக்கும் விடயங்கள், தற்காலத்தைச் சேர்ந்தனவாக, தேவையான தொடர்புடையனவாக, அவரவர் வயதுக்குப் பொருத்தமானவையாக இருத்தல் அவசியம். இதன்மூலம் நாங்கள் மாணவர்களுக்கு இயலுமான மிகவும் சிறப்பான தகவலினை வழங்கவும், அவர்கள் தமது ஆரோக்கியம் மற்றும் பொதுநலன் பற்றித் தகவலுடன் கூடிய தீர்மானங்கள் எடுப்பதற்கும் முடிகிறது. அது மட்டுமன்றி, நாங்கள் கற்பிக்கும் எமது பாடத் திட்டம், பல்லின நிலையிலான எமது மாணவர் சமுதாயத்தில் உள்ள யாவரையும் உள்ளடக்கியதாகவும், கல்விச் சபை நீண்ட காலமாக முக்கியத்துவம் அளிக்கும் நீதியான அங்கீகாரம் வழங்குதல் மற்றும் யாவரையும் சேர்த்து நடத்துதல் போன்றவற்றைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பது முக்கியம் ஆகும்.

இப்பாடத்திட்டத்தினை மாணவர்களுக்கு வழங்குதல் பற்றிய மேலதிகத் தகவல் 2015 செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

அதற்கு இடையில், கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் (Ministry website) உள்ள முழுமையான பாடத் திட்டம் மற்றும் பெற்றோருக்கு என்று இருக்கும் தகவல் மூலவளங்கள் ஆகியவற்றை வாசித்துப் பார்க்கும்படி பெற்றோரை நாம் ஊக்குவிக்கிறோம்

இப்பாடத் திட்டத்தின் உள்ளடக்கம் பற்றிக் கேட்பதற்கு உங்களிடம் மேலும் கேள்விகள் உண்டென்றால், தயவு செய்து கல்வி அமைச்சுடன் 416-325-6870 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

பிரதானமான உண்மைத் தகவல்கள்:

  • பாடத் திட்டத்தினை உருவாக்கும் கடமை கல்வி அமைச்சுக்கு உரியது ஆகவும் அதனை நடைமுறைப்படுத்தும் கடமை பாடசாலைச் சபைக்கு உரியதாகவும் உள்ளன. பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தினை கட்டுப்படுத்தும் எவ்வித வலிமையும் TDSB படசாலைச் சபைக்கு இருப்பதில்லை.
  • புதிய பாடத் திட்டத்தினை மாணவர்களின் விருத்தி நிலை மற்றும் வயது ஆகியவற்றுக்குப் பொருந்தும் விதத்தில், தொழில் மரபுக்கு அமைவாக, உரிய முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கும் விடயத்தில் TDSB ஊழியர்கள் உறுதியாகச் செயற்படுகின்றனர்.
  • கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் (Ministry of Education’s website) அடங்கி உள்ள முழுப்பாடத் திட்டம், பெற்றோருக்கான வழிகாட்டிகள் மற்றும் விரைவாகப் படிக்கக் கூடிய உண்மைத் தகவல்கள் ஆகியவற்றை யாவரும் அணுகி வாசிக்கலாம். பின்வரும் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ள பெற்றோருக்கான வழிகாட்டிகளுக்கு இட்டுச் செல்லும் இணைப்புகளும் இந்த இணையத் தளத்தில் இருப்பதைக் காணலாம்: அராபிய மொழி, எளிதாக்கிய சீனமொழி, பாரம்பரிய சீனமொழி, ஃபார்சி, போலிஷ், பஞ்சாபி, சோமாலி மற்றும் உருது (Arabic, Chinese Simplified, ChineseTraditional, Farsi, Polish, Punjabi, Somali and Urdu).
© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL