Toronto District School Board
Toronto District School Board

Frequently Asked Questions

பாலர் வகுப்புகள்

TDSB இல்

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

1.யார் பாலர் வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும் ?

ரொறொன்ரோவில் வசிக்கும் ஒவ்வொரு பிள்ளையும்TDSBஆல் நடத்தப் படும்பாடசாலை ஒன்றில் சேர்வதற்கு வரவேற்கப்படுகின்றனர். செப்டெம்பர் மாதத்தில் இளமழலை வகுப்பில் சேர்வதற்கு அதே வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று பிள்ளைகள் நான்கு வயதினராக இருத்தல் வேண்டும் .செப்டெம்பர் மாதத்தில் முதுமழலை வகுப்பில் சேர்வதற்கு அதே வருடத்தில் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று பிள்ளைகள் ஐந்து வயதினராக இருத்தல் வேண்டும்.

2. பாலர் வகுப்பில் ஒரு பிள்ளையை யார் பதிவு செய்ய முடியும் ?

பிள்ளையின் பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாவலர் மட்டுமே ஒரு பிள்ளையைப் பாலர் வகுப்பில் சேர்வதற்குப் பதிய முடியும்.

3. நான் எனது பிள்ளையை எப்பொழுது பாலர் வகுப்பிற்குப் பதிய வேண்டும்?

பாலர் வகுப் பிற்கான பதிவுகள் பெப்ரவரி மாதம் தொடங்கி அதே கல்வி ஆண்டு வரையும் தொடருகின்றது.ஒவ்வொரு பாடசாலையும் குறிப்பிட்ட நாட்களை பதிவு நாட்களாக நியமித்திருக்கின்றன. தயவு செய்து உங்கள் வீட்டருகில் உள்ள பாடசாலையுடன் தொடர்புகொண்டு பதிவுக்கு நியமிக்கப்பட்ட திகதிகளையும் நேரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து அவதானிக்கவும்- பிரஞ்சு மொழியில் படிப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் உங்கள் பிள்ளை இளமழலை வகுப்பில் இருக்கும் ஜனவரி மாதத்தில் நடைபெறும்.

4.என் பிள்ளை எந்தப் பாடசாலைக்குச் செல்ல வேண்டும் ?

உங்கள் பிள்ளை எந்தப் பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அறிவதற்கு 416 394 7526 என்ற தொலைபேசி எண்ணை அழையுங்கள் அல்லது tdsb.on.ca இணையத் தளத்திற்குச் சென்று அப்பக்கத்தின் மேலே உள்ள பகுதியில் உங்கள் பாடசாலையை அறிந்து கொள்ளுங்கள் . Find your School என்ற பகுதியில் க்ளிக் செய்யுங்கள் .

5.எனது வீட்டு விலாசத்திற்கென ஒதுக்கப்பட்ட பாடசாலையி னைத் தவிர்த்து வேறு பாடசாலையில் என் பிள்ளையை நான் சேர்த்துக் கொள்ள விரும்பினால் என்ன?

tdsb.on.ca என்ற இணையத்தளத்தில் காட்டபட்டிருக்கின்ற விருப்பத்தேர்வு வரவுக் கொள்கை மூலமாக நீங்கள் உங்கள் பிரதேசத்துகு வெளியே இருக்கும் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் . இடப் பற்றாகுறை காரணமாக பல பாடசாலைகள் விருப்பத்தேர்வு வரவினை ஏற்பதில்லை என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும் .நீங்கள் தெரிவு செய்யப் போகும் பாடசாலை விருப்பத்தேர்வு வரவு மூலமாக விண்ணப்பங்களை ஏற்கின்றதா அந்தப் பாடசாலையுடன் முதலில் தொடர்பு கொண்டு அறியவும்.

6. எனது பிள்ளை பிரஞ்சு மொழிப் பாடத்திட்டத்தில் படிப்பதற்கு நான் எப்பொழுது பதியலாம்?

ஆரம்ப நிலைப் பிரஞ்சு மொழிப் பாடத்திட்டம் முதுமழலை பாலர் வகுப்பில் ஆரம்பமாகிறது. பிரஞ்சு மொழிப் பாடத்திட்டத்தில் படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நான்காம் வகுப்பில் ஆரம்பிக்கின்ற நடுப்பள்ளி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடகவும் கிடைக்கிறது.மேலதிகத் தகவல்களுக்குtdsb.on.ca>Elementary School>School Choices>FrenchPrograms என்ற இணயத்தளத்திற்குச் செல்லுங்கள் .

7.எனது பிள்ளையைப் பாலர் வகுப்பில் பதிவதற்கு நான் கொண்டு வரவேண்டிய தகவல்கள் என்ன?

உங்கள் பிள்ளையைப் பாலர் வகுப்பில் பதிவதற்கு அத்தாட்சிப் படுத்தப் பட்ட பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வாருங்கள் :

  • வயது ( பிறப்புச் சான்றிதழ் அல்லது ஞானஸ்நானப் பதிவு அல்லது கடவைச் சீட்டு )
  • விலாசம் ( உங்கள் தொலபேசிக் கட்டணச் சீட்டு ,சாரதி ஓட்டுனர் தகுதிச் சான்றிதழ் போன்ற உங்கள் வதிவிடத்தைக் காட்டும் இரண்டு அடையாள அட்டைகள் )
  • நோய்த் தடுப்பு ஊசிகள் ( உங்கள் பிள்ளைக்குப் போடப்பட்ட நோய்த் தடுப்பு ஊசிகளின் விபரங்கொண்ட அட்டை )

8.என் பிள்ளை கனடாவிற்கு வெளியில் பிறந்திருந்தால் என்ன ?

உங்கள் பிள்ளை கனடாவிற்கு வெளியில் பிறந்திருந்தால் நீங்கள் கனடாவுக்கு வந்த திகதியை உறுதிப்படுத்த வேண்டும்.நிரந்தர குடிவரவாளர் மற்றும் அகதி கோரிக்கையில் உள்ள குடும்பத்தார் நேரடியாகப் பாடசாலையில் பதியலாம் .ஏனைய குடும்பங்கள் பாடசாலை அனுமதிக் கடிதத்தினைப் பெறுவதற்கு 5050 yonge Street என்ற இடத்தில் அமைந்துள்ள சர்வதேச திட்ட மற்றும் அனுமதி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.குடிவரவு அந்தஸ்தில்லாத பிள்ளைகள் எங்கள் பாடசாலைகளில் வரவேற்கப்படுவதுடன் அவர்கள் பற்றிய விபரம்TDSB னது P .061 SCH என்ற கொள்கைக்கமைய குடிவரவு அதிகாரிகளுடன் பகிரப்படமாட்டது.

9.மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் என்னிடம் இல்லை எனில் என்ன ?

சர்வதேசத் திட்ட மற்றும் அனுமதி அலுவலகத்துடன் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள் - 5050 Yonge Street ( முதலாவது மாடி ) ,தொலைபேசி 416 395 8220 ,மின்னஞ்சல் - admissions@tdsb.on.ca.

10. எனது பிள்ளைக்கு விசேட கல்வித் தேவைகள் இருந்தால் என்ன ?

உங்கள் பிள்ளைக்கு விசேட கல்வித் தேவைகள் இருந்து பாடசாலைக்கு முதன் முறையாகச் செல்வதாயின் பாடசாலை அதிபரோடும் மற்றும் TDSB இன் விசேட கல்வித் திணைக்களப் பிரதிநிதியோடும் ஒரு சந்திப்பினை ஏற்படுத்துவதற்காக உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலையை அழையுங்கள்.இந்தச் சந்திப்பில் உங்களின் ஏதும் தேவைகள், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பற்றியும் மற்றும் உங்கள் பிள்ளைக்கு பாடசாலையில் கிடைக்ககூடிய உதவிகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கலாம்.கூட்டாகச் செயற்படுவதன் மூலம் உங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு வெற்றிகரமாக மாறுகின்ற நிலைக்குத் தேவைபடுகின்ற உதவிகள் மற்றும் வளங்கள் எவை என்பதைத் தீர்மானித்து கொள்ளலாம்.

11.எனது பிள்ளையின் பாடசாலைக்கு வேறு என்ன தகவல் தேவைப்படும்?

உங்கள் பிள்ளை பாடசாலையில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு உங்கள் பாடசாலைக்குத் தெரிய வேண்டியவை யாவன :

  • உங்கள் பிள்ளையைக் கூப்பிடும் பெயர் ,ஆவணத்தில் உள்ள பெயரை விட வித்தியாசமானதாக இருந்தால்
  • ஏதும் ஒவ்வாமை மற்றும் வேறு ஏதும் மருத்துவக் கரிசனங்கள்
  • பிள்ளையுடன் வாழும் பெற்றோர்(கள்) அல்லது பாதுகாவலர்(கள்)மற்றும் பிள்ளையைப் பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்பவர் ஆகியோரின் தற்போதைய தொலைபேசி எண்கள் (வீடு ,வேலை,கைத்தொலைபேசி )
  • பிள்ளை பராமரிப்பாளரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்
  • அவசரத் தேவைக்கென அழைக்கக்கூடியவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்
  • பாடசாலைக்கு வரும் சகோதரர் ,சகோதரிகளின் பெயர்கள்
  • வீட்டில் பேசப்படுகின்ற மொழி( கள்)
  • பிள்ளயைப் பாதிக்கக்கூடிய தனிப்பட்ட அல்லது சட்டச் சூழ்நிலைகள்

இத் தகவல்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ளதாக இருத்தல் அவசியம். நடப்புக் கல்வி ஆண்டில் இத்தகவல்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் பற்றி தயவுசெய்து பாடசாலைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாடசாலைக்குப் பதிவுகளை மேற்கொள்ளும் நடைமுறைகளின் ஒரு அங்கமாக வளர்ச்சிசார் சரித்திரப் படிவமொன்றை நிரப்புமாறு நீங்கள் கேட்கப்படுவீர்கள். உங்கள் பிள்ளையின் விருப்பங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக இப் படிவம் பயன்படுத்தப்படும். உங்கள் பிள்ளையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் ஒரு பாடத்திட்டத்தை ஆயத்தம் செய்வதற்கு இது உதவும்.

12.பாலர் வகுப்பில் பிள்ளைகள் என்ன கற்பார்கள் ?

மொழி,கணிதம்,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ,சுய மற்றும் சமூக வளர்ச்சி ,சுகாதாரம் மற்றும் கலைகள் ஆகிய ஆறு முக்கிய கற்கை விடயங்களில், வினாவுதல் மற்றும் உயர்மட்ட சிந்தித்தல் என்பவற்றினை ஊக்கப்படுத்துவதற்கு வேண்டிய கற்றல் அனுபவங்களைத் திட்டமிடு கின்றதும் மறுமொழி கூறிக் கற்பிக்கின்றதுமான ஒரு கல்விக் குழுவுடன் சேர்ந்து விளையாட்டினை அடிபடையாகக் கொண்ட ஒரு கற்றல் சூழலில் பிள்ளைகள் கல்வி கற்பார்கள்.

இந்த இரண்டு வருட காலப்பகுதியில் பிள்ளைகள் கற்பதைப் பற்றியும் பாடசாலையைப் பற்றியும் நல்ல மனப்பாங்கினை வளர்க்கின்ற அதே நேரத்தில் தங்கள் சுய கட்டுப்பாட்டினை விருத்தி செய்வதோடு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களையும் வளர்க்கிறார்கள் .பாலர் வகுப்பில் உள்ள நாட்கள் முழுவதிலும் நாடகம் ,எழுத்து, கணக்கு, புத்தகத் தொகுதி, நிறம் தீட்டுதல் மற்றும் கற்பனையில் வரைதல் மற்றும் மணல், தண்ணீர் , கட்டுமானத் தொகுதிகள் போன்றவற்றோடு செயற்படுதல் ஆகியவற்றினை உள்ளடக்கிய கற்கை நிலையங்களில் ஆராய்ந்து பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் பிள்ளைகளுக்கு இருக்கின்றது.

செப்டெம்பர் 2014 தொடக்கம் பாலர்வகுப்புத் திட்டமும் முழு நேர பாலர் கற்கைத் திட்டமும் Draft Version 2010- 2011 ( edu.gov.on.ca) என்பதன் அடிப்படையில் நடைபெறும் .

13.எனது பிள்ளையின் கல்வியில் நான் எப்படி ஈடுபட முடியும் ?

நீங்கள் உங்கள் பிள்ளையின் கல்வியில் பல்வேறு வழிகள் மூலம் தீவிரமாக ஈடுபட்டு பாடசாலையில் உங்கள் பிள்ளையின் வெற்றிக்கு உதவி செய்ய முடியும்.

  • ஒவ்வொரு நாளும் பாடசாலையைப் பற்றி உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள்.
  • உங்கள் பிள்ளைக்கு வாசியுங்கள்
  • உதவி செய்யுங்கள்
  • உங்கள் பிள்ளையின் திறமைகளைப் பற்றியும் இன்னும் முன்னேற்றம் காணப்பட வேண்டிய விடயங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இந்தத் தகவலை ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • பெற்றோர் ஆசிரியர் கூடங்களில் பங்கு கொள்ளுங்கள் .
  • பாடசாலை தொழிற்பாடுகளிலும் பாடசாலை மன்றத்திலும் ஈடுபடுங்கள்.
  • தொண்டு வேலை செய்து வகுப்பறை நிகழ்வுகழுக்குத் துணை செய்யுங்கள்.

14.எனது பிள்ளை பாடசாலையில் எப்படிச் செய்கின்றார் என்பதை நான் எப்படி அறியமுடியும் ?

உங்கள் ஆசிரியர் கல்வி ஆண்டில் உத்தியோக ரீதியிலும் உத்தியோகப் பற்றற்ற ரீதியிலும் பல விதங்களில் உங்களிடம் தொடர்பு கொள்வார். பெற்றோர்-ஆசிரியர் நேர்முகச் சந்திப்பிலும் பெறுபேற்று அறிக்கை அட்டைகள் மூலமாகவும் உங்கள் ஆசிரியர் உங்கள் பிள்ளையின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வார். உங்கள் பிள்ளையைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால் பிள்ளையைப் பற்றிய மேலதிக விபரங்களைப் பகிர்ந்து கல்வி ஆண்டில் உங்கள் ஆசிரியருடன் தொடர்பில் இருக்க ஊக்கப்படுத்தப் படுகிறீர்கள்.

15. பாடசாலைக்குத் தொடங்க முன்பும் பாடசாலை முடிந்த பின்பும் என்ன நிகழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன?

கட்டண அடிப்படையில் பாடசாலை தொடங்க முன்பும் பாடசாலை முடிந்த பின்பும் பலருக்கெனத் தனியாக நடாத்தப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டங்களில் இளநிலை முதுநிலை பாலர் வகுப்பு மாணவரின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருடன் இருக்கும் அக்கறை பற்றி ஒரு ஆய்வு ஒவ்வொரு மாதமும் நடாத்தப்படுகின்றது இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள் பிள்ளைப் பராமரிப்பினை வழங்குகின்ற ஒரு மூன்றாம் தரப்பினரால் பாடசாலையில் நடாத்தப்படுகின்றன .இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் காலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரையும் மாலை 3.30 மணி தொடக்கம் 6.00 மணிவரையும் வழங்கப்படும் . இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் சரியான நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்.

பெற்றோர் மற்றும் பாதுகாவலராகிய நீங்கள் உங்கள் பிள்ளையை உங்கள் தொகுதியில் உள்ள பாடசாலையில் பாலர் வகுப்பிற்குப் பதிவு செய்யும் பொழுது பாடசாலை தொடங்க முன்பும் பாடசாலை முடிந்த பின்பும் நடக்கக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய ஆய்வுப்பத்திரம் ஒன்றைப் பெறுவீர்கள்.பூர்த்தி செய்யப்பட்ட ஆய்வுப் பத்திரத்தினை பெப்ரவரி மாத இறுதிக்கு முன்பாக உங்கள் பாடசாலையில் தயவு செய்து சமர்ப்பியுங்கள். ஒரு நிகழ்ச்சித் திட்டத்திற்கு பாடசாலையில் போதிய அக்கறை உள்ளதா இல்லையா என்பதைப்பற்றி சித்திரை மாத்ததில் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL