Toronto District School Board
Toronto District School Board

French Programs

பிரெஞ்சு கல்வித் திட்டங்கள்

எந்த ஒரு மாணவரின் விடயத்திலும் இரண்டாவதாக வேறொரு மொழியினைக் கற்பது அவருக்குச் சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்துவதுடன், கல்வித் துறையில் அவர் வெற்றிகாண்பதற்கு உதவும் முக்கியமான ஒரு காரணியாக அது அமைந்து விடுகிறது. இரண்டாவதாகக் கற்கும் வேறு ஒரு மொழியினால் ஒருவருக்குப் படிப்பதில் உள்ள பொதுவான திறன்கள் உயர்வு அடைதல், வேலை வாய்ப்புகள் விரிவடைதல், கலாச்சாரங்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வு ஊக்கம் பெறுதல் ஆகிய நன்மைகளுடன், பல மொழிகள் தெரிந்த பிரஜைகளும் உருவாகின்றனர். TDSB பாடசாலைச் சபை, ஆரம்பநிலைப் பாடசாலைகளிலும் இரண்டாம் நிலைப் பாடசாலைகளிலும் இரண்டாவது மொழியாக பிரெஞ்சினைக்(French as a Second Language) கற்பிக்கும் பல்வேறு வகையான திட்டங்களை வழங்கி வருகிறது.

இங்குள்ள எல்லா மாணவர்களுக்கும் 4-8 தரங்களில் அடிப்படைப் பிரெஞ்சு (Core French) ஒரு பாடமாக நாளொன்றுக்கு 40 நிமிடங்கள் கற்பிக்கப்படுகின்றது. இரண்டாம் நிலைப் பாடசாலைகளிலும் 9-12 தரங்களில் இது தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. இங்குள்ள மாணவர்கள் தமது இரண்டாம் நிலைப் பாடசாலைக்குரிய டிப்ளோமா சான்றிதழைப் பெறுவதற்கு தரம் 9 இல் பிரெஞ்சு மொழியில் ஒரு திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

தீவிர பிரெஞ்சு மொழித்திட்டங்களில் இரண்டு வகைகள் உள்ளன: அவை அமிழ்ந்த அறிவுப் பிரெஞ்சு (French Immersion) மற்றும் விரிவாக்கிய அறிவுப் பிரெஞ்சு (Extended French). இந்த இரண்டு திட்டங்களிலும் மாணவர்கள் பிரெஞ்சு மொழியினை ஒரு மொழி மட்டும் என்று கற்காமல் அந்தமொழியில் கற்பிக்கப்படும் வேறு பாடங்களின் ஊடாகவும் அதனை மேலதிகமாகக் கற்றுக் கொள்கின்றனர்.

பிரெஞ்சு மொழிக்கான திட்டங்களை இணையத்தளத்தில் தேடுங்கள்.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL