Toronto District School Board
Toronto District School Board

Find your School

உங்கள் பாடசாலையைக் கண்டறியுங்கள்    

ரொறொன்ரோ நகரத்தின் உள்ளே வாழுகின்ற மாணவர்கள் அவர்கள் வாழும் இடத்தின் முகவரிக்குரிய பகுதிக்கு சேவையளிக்க வேண்டும் என்று ஒதுக்கப்பட்டு உள்ள குறித்த பாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். பாடசாலைச் சபையின் இணையத் தளத்தில் “உங்கள் பாடசாலையைக் கண்டறியுங்கள்” (Find Your School) என்ற பிரிவின் கீழ் ஒவ்வொரு வாழும் இடத்தின் முகவரிக்கும் என ஒதுக்கப்பட்டு உள்ள பாடசாலையினை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

மாணவர்கள் தமது வாழும் இடத்தின் முகவரிப் பகுதிக்கு என்று ஒதுக்கப்பட்டு உள்ள பாடசாலைக்குப் புறம்பாக, வெளியே உள்ள பாடசாலைகளுக்குச் சென்று படிப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு அவர்கள், விருப்பமான பாடசாலைக்குச் செல்லுவதற்கான (optional attendance) படிவத்தில் விண்ணப்பம் செய்யவேண்டும். இவ்வாறு வெளியில் அமைந்த பாடசாலைகளில் மாணவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு, அப்பாடசாலைகளில் கிடைக்கக் கூடியதாக உள்ள இடவசதி, மற்றும் அங்குள்ள பாடத்திட்டம் விண்ணப்பம் செய்வோருக்குப் பொருந்தும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும். மாணவர்கள் தமக்கு விருப்பமான பாடசாலைக்குச் செல்லும் வசதி சம்பந்தப்பட்ட நடைமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கால ஒழுங்குகள் ஆகியன சபையின் இணையத் தளத்தில், விருப்பமான பாடசாலைக்குச் செல்லும் கொள்கை(Optional Attendance Policy) மற்றும் விருப்பமான பாடசாலைக்குச் செல்லும் ஏற்பாட்டு நடைமுறை (Optional Attendance Operational Procedure) ஆகிய தலைப்புகளின் கீழ் (ஆங்கிலத்தில் மட்டும்) விபரிக்கப்பட்டு உள்ளன.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL