Toronto District School Board
Toronto District School Board

Caring and Safe Schools

கவனித்துப் பராமரிக்கும் பாதுகாப்பான பாடசாலைகள்

பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு உள்ள சுற்றாடல்கள், கவனித்துப் பராமரிப்பு வழங்கும், பாதுகாப்பான, அமைதியான, வளர்ச்சியைத் தூண்டும், நன்மை அளிக்கின்ற, மரியாதையுடன் கூடிய இயல்பு உடையனவாகவும், சகல மாணவர்களும் தமது பூரண உள்ளார்ந்த திறமை நிலையை அடைவதற்கு உதவுவனவாகவும் இருக்கும் விதத்தில், அச்சுற்றாடல்களை உருவாக்குவதில் TDSB பாடசாலைச் சபை உறுதியுடன் செயற்பட்டு வருகிறது.

ஒரு பாடசாலையில் நன்மையான ஒரு சூழ்நிலை நிலவும் பொழுது, அப்பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த சகல அங்கத்தவர்களும் தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும், எல்லோராலும் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், ஒருவரோடு ஒருவர் பயன்தரும் பழக்க வழக்கங்களையும் உறவாடல்களையும் கொண்டிருப்பதாகவும் உணருகின்றனர். எமது பாடசாலைச் சபை இரண்டுவருடங்களுக்கு ஒரு தடவை எங்களுடைய பாடசாலைகளில் பாடசாலைச் சூழ்நிலை கருத்துக் கணிப்புகளை (School Climate Surveys) நடாத்தி அவற்றின் மூலம் மாணவர்கள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் தமது பாடசாலைச் சூழ்நிலை பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்களை நேரடியாக அறிகிறது. இக்கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பயன்படுத்தி, நாங்கள் பாடசாலைகளில் அடாவடித்தனத்தைத் தடுக்கவும், பாதுகாப்பாக யாவரையும் சேர்த்துக் கொண்டு செயற்படும் சூழலை வளர்க்கவும் உதவுகின்ற திட்டங்கள் தொடர்பாகத் தகவலுடன் கூடிய திட்டமிடல் தீர்மானங்களை எடுப்பதற்கு முடிகிறது.

பாடசாலைகளில் நன்மை தரும் சுற்றாடல்களை உருவமைத்துக் கொள்ள உதவும் விதத்தில், நாங்கள் பல்வேறு வகையான தடுப்புத் திட்டங்களையும், கவனித்துப் பராமரிப்பு வழங்கும் பாதுகாப்பான பாடசாலை முன்னேற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். இவை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்குத் தயவு செய்து நாங்கள் வழங்கும் தடுப்புத் திட்டங்கள் (prevention programs) பற்றி வாசியுங்கள்.

சகல மாணவர்களும் பாடசாலைச் சபையின் நடைமுறை விதிக் கோவை (Board Code of Conduct) வழிகாட்டலின்படி நடந்து கொள்வதுடன், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கு உரிய மரியாதை அளித்துச் செயலில் காட்ட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அறிந்து கொள்ளுங்கள்

நெருக்கடியான சம்பவங்களின் முன்பும் பின்பும், சகல மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் கவனிப்புடன் கூடிய பராமரிப்பு ஆகியவற்றை மிகச் சிறப்பாகப் பேணுவதற்கு, TDSB பாடசாலைச் சபை எவ்வாறு நவீன முறையில் செயற்படலாம் என்பது பற்றிச் சில பரிந்துரைகள் பாடசாலைப் பாதுகாப்பு மற்றும் ஈடுபாடு கொள்ளும் சமூகங்கள் அறிக்கை (School Safety and Engaged Communities Report) என்ற வெளியீட்டில் கூறப்பட்டு உள்ளன. இந்த அறிக்கையை நீங்கள் வாசியுங்கள். சபையின் ஊழியர்கள் 2015 ஆண்டின் இலையுதிர் காலப் பகுதியில் இப்பரிந்துரைகள் பற்றிய தமது எண்ணங்களைத் தெரிவிப்பர்.

TDSB பாடசாலைச் சபையில் ஒவ்வொரு வருடமும் செப்ரெம்பர் மாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்கள், கவனித்துப் பராமரிக்கும் பாதுகாப்பான பாடசாலைகளுக்கான வாரங்களாகக் கொண்டாடப்படுகின்றன. இக் காலப்பகுதியில் நன்மை தரும் பாடசாலைச் சூழ்நிலையினை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகள் பற்றிப் பாடசாலைகளில் கவன ஈர்ப்பு நடாத்தப்படும். அத்துடன் எமது பாடசாலைகளில் நல்லிணக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றை ஊக்குவிக்கும் சிறப்பான பங்காண்மைகள் மற்றும் திட்டங்கள் பற்றியும் கொண்டாடப்படும்.

எமது பாடசாலைகளில் நன்மை தரும் ஆரோக்கியமான உறவுகளை ஊக்குவிப்பதற்காக நாங்கள் எவ்வாறு ஒன்று கூடி உழைக்கிறோம் என்பது பற்றி மேலும் தகவலினைப் பெறுவதற்கு, பாலின அடிப்படையிலான வன்முறைத் தடுப்பு அல்லது சமத்துவமாக யாவரையும் சேர்த்துச் செல்லும் பாடசாலைகள் (Gender-Based Violence Preventionor Equitable and Inclusive Schools) ஆகியவற்றை இணையத்தளத்தில் பாருங்கள்.

கவனித்துப் பராமரிக்கும் பாதுகாப்பான பாடசாலைக்கான குழு (Caring and Safe School Committee) ஒன்றில் எப்படி ஈடுபடுவது என்று அறிவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? தயவு செய்து உங்கள் பாடசாலை அதிபருடன் இதுபற்றிக் கதையுங்கள்.

TDSB பாடசாலைச் சபையின் கவனித்துப் பராமரிக்கும் பாதுகாப்பான பாடசாலைகளை உருவாக்குதல் தொடர்பான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை வாசியுங்கள். அல்லது எமது திட்டங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்று கண்டு கொள்வதற்கு எமது கவனித்துப் பராமரிக்கும் பாதுகாப்பான பாடசாலைகளின் வருடாந்த அறிக்கையினைப் படியுங்கள்

மாணவர்களை இடைநிறுத்துதல் மற்றும் வெளியேற்றுதல் பற்றிய தகவலினை பெறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? தயவு செய்து இணையத்தளத்தில் எமது கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் (policies and procedures) என்ற பிரிவில் பார்வையிடுங்கள்.

மாணவர்களின் கல்வி பற்றி ஏதாவது கரிசனங்கள் அல்லது கேள்விகள் உங்களிடம் இருக்கின்றனவா? தயவு செய்து இணையத்தளத்தில் எமது பெற்றோரின் கரிசனம் செயல் வரைமுறை (Parent Concern Protocol) பகுதிக்குச் செல்லுங்கள். அல்லது உங்கள் பாடசாலை அதிபர் அல்லது வழிகாட்டும் ஆலோசகருடன் கதையுங்கள். கவனித்துப் பாராமரிக்கும் பாதுகாப்பான பாடசாலைகள் குழு (Caring and Safe Schools Team) அங்கத்தவர் ஒருவருடனும் நீங்கள் கதைக்கலாம்.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL