Toronto District School Board
Toronto District School Board

About The Program

பாலர் வகுப்புகள்

TDSB இல்

இந்த நிகழ்ச்சித் திட்டத்தைப் பற்றி

பாடசாலையினை ஆரம்பிக்கும் கட்டமானது உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் ஒரு குதூகலமான கால கட்டமாகும்.ஏற்படுத்திக்கொள்வதற்கும் உங்கள் பிள்ளைக்கு அநேக சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

எமது முழுநேரப் பாலர் பயிற்சித்திட்டம் ஒவ்வொரு பிள்ளைக்கும் நல்ல திறமையான ஒரு ஆரம்பத்தைத் தரக்கூடியவாறு மிகவும் பயனுள்ளதும் பாதுகாப்புத் தரக்கூடியதுமான ஒரு கற்றல் சூழலைத் வழங்குகின்றது.மொழி ,கணிதம்,சுகாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம், சுய மற்றும் சமூக வளர்ச்சி ,சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி , மற்றும் கலைகள் ஆகிய ஆறு முக்கிய கற்கை விடயங்களின் வளர்ச்சிக்கான சந்தர்பங்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் ,வினாவுதல் ,மற்றும் விளையாடுதல் என்பதனை அடிப்படையாகக்கொண்ட கற்றல் நுட்பங்களை நாம் உருவாக்கு கின்றோம்.

மொழி

பிள்ளைகள்:

  • அடிப்படை எழுத்தறிவுத் திறன்களை வளர்த்துக் கொள்வார்கள்
  • பேசுதல் , வரைதல்,வண்ணம் பூசுதல் ,மற்றும் எழுதுதல் மூலம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார்கள் . அத்துடன்
  • தனிச்சையாக வாசிக்கப் பழகிக் கொள்வார்கள்

கணிதம்

பிள்ளைகள் :

  • எண்ணுதல்,அளத்தல்,வகைப்படுத்தல் ,மற்றும் இனவாரியாகப் பிரித்தல்,என்பவற்றைக் கற்றுக்கொள்வார்கள்.
  • மாதிரி அமைப்புக்களை இனங்கண்டு அவற்றை உருவாக்குதல் மூலமாக பகுத்தறியும் திறன்களைக் கட்டி எழுப்பிக் கொள்வார்கள் அத்துடன்
  • பிரச்சனயைத் தீர்க்கும் திறன்கள், எண்ணங்களைப் பகிர்தல்,மற்றும் அவதானிப்புக்களைப் பற்றி உரையாடுதல் என்பவற்றை விருத்திசெய்து கொள்வார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

பிள்ளைகள் :

  • எமது உலகத்தில் தொழில் நுட்பம் எமக்கு எவ்வாறு உதவுகின்றது என்பதை ஆய்வு மற்றும் உருவாக்கம் மூலமாகக் கண்டறிவார்கள்.
  • கேள்வி திறன்களைப் பயன்படுத்தி (கேள்வி கேட்டல் ,திட்டமிடல் , வரப்போவது பற்றி எதிர்வுகூறல், அவதானித்தல் மற்றும் தொடர்பாடல் ) பரிசோதனைகளைச் செய்வார்கள் . அத்துடன்
  • இயற்கையான உலகத்திற்காக ஆய்வும் அகக்றையும் காட்டுவார்கள் .

சுய மற்றும் சமூக வளர்ச்சி

பிள்ளைகள் :

  • சக மாணவர்களுடனும் வயது வந்தவர்களுடனும் தொடர்பாடி செயற்படுவதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வார்கள்.
  • ஏனையோரின் உணர்வுகளை அடையாளங் கண்டு அதற்கேற்பச் செயற்படுவார்கள் .
  • தனிப்பட்ட வேறுபாடுகளை மதிக்கவும் பாராட்டவும் கற்றுக் கொள்வார்கள்.

சுகாதரம் மற்றும் உடற்பயிற்சி

பிள்ளைகள்:

  • பலம், ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையைப் பேணுகின்ற ஆரோக்கிய நடைமுறைகளை வளர்க்க உதவுகின்ற நடவடிக்கைகளில் தினந்தோறும் பங்குபெறுவார்கள் ,அத்துடன்
  • ஆரோக்கியமான உணவுத் தெரிவுகள் பற்றியும் சுறு சுறுப்பாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் உரையாடுவார்கள்

கலைகள்

பிள்ளைகள்:

  • காட்சி சார்ந்த கலைகள்,இசை, நாடகம் மற்றும் நடனம் மூலம் படைப்பாற்றல் திறன் கற்பனைத்திறன் என்பவற்றினை வெளிப்படுத்துவார்கள்
  • பல்வேறு கலை வடிவங்கள் குறித்த எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வார்கள், அத்துடன்
  • தங்களின் சொந்த கலாச்சாரம் உட்பட உலகில் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்கள் பற்றி அறிந்து கொள்வார்கள்.

விளையாட்டு மூலம் கற்றல்

விளையாட்டு மற்றும் வினாவுதல் மூலமான கற்றல் என்பது ஒரு பிள்ளையின் ஆரம்ப வளர்ச்சியினை - குறிப்பாக பிரச்சனையைத் தீர்க்கும் திறன்கள் ,மேன்மையான சிந்தனை , படைப்பாற்றல் திறன்கள் ,மற்றும் சமூகத்திறன்கள் என்பவற்றினை விருத்தி செய்தல் போன்ற விடயங்களை மேம்படுத்துகின்றது.பிள்ளைகள் மிகவும் சுறுசுறுப்புடன் பங்கு பற்றி அவர்கள் செய்யக்கூடியதும் சிந்திக்கக்கூடியதுமான கற்றல் அனுபவங்களை எமது ஆசிரியர்கள் திட்டமிடுகின்றனர் .

TDSB இல் பாலர் வகுப்புகள் மற்றும் ஆரம்பநிலை பிரஞ்சு பாடத்திடம் பற்றிய மேலதிக விபரத்திற்கு tdsb.on.ca/kindergartenஎன்ற இணையத் தளத்தை அணுகவும் .

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL