Toronto District School Board
வரவேற்கிறது
வயது வந்து கற்பவர்கள்
ஆரம்ப நிலைப் பாடசாலை
உங்கள் பாடசாலையைக் கண்டறியுங்கள்
பிரெஞ்சு கல்வித் திட்டங்கள்
உயர்பாடசாலை
பாலர் வகுப்புக்கு பதிவு செய்தல்
புது வரவாளர்கள்
கணினி வழித் தொடர்பின் ஒழுக்க விதிக்கோவை
பெற்றவர்/குடும்பம் மற்றும் சமூகம் காட்டும் ஈடுபாடு
அனுமதிச் சீட்டுகள்
பாடசாலை வருட நாட்காட்டி
விசேட கல்வி
இந்த நிகழ்ச்சித் திட்டத்தைப் பற்றி
அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
வீட்டுக் குறிப்புகள்
ஆட்சிமுறை/ நம்பிக்கைப் பொறுப்பாளர்கள்
கவனித்துப் பராமரிக்கும் பாதுகாப்பான பாடசாலைகள்
ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சிக் கல்விக்கான புதுப்பித்த பாடத் திட்டம்

ரொறொன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை உங்களை வரவேற்கிறது

ரொறொன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை (TDSB) பல்லின இயல்பு கொண்ட ஒரு பாடசாலை அமைப்புத் திட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற ஆயிரக் கணக்கான புதிய மாணவர்களை எமது பாடசாலைகளுக்குள் வரவேற்கிறோம். எமது இணையத் தளத்தின் இப்பகுதியில் TDSB பாடசாலைச் சபை பற்றிய முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக, எமது பாடசாலைகளை எப்படித் தேடிக் கண்டறிவது, புதிய மாணவர்களை எப்படிப் பதிவு செய்வது மற்றும் சபையினைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்றவை இங்கு இருப்பதைக் காணலாம். இத்தகவல் 22 வகையான பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

TDSB பாடசாலைச் சபையின் இணையத் தளத்தில் ஆங்கிலத்தில் மட்டும் பெறக் கூடியதாக உள்ள தகவலினை நீங்கள் தேடிக்காண நேர்ந்தால், அதனை உங்கள் பாடசாலைக் காரியாலயத்துக்கு எடுத்து செல்லும் பொழுது அங்குள்ள எமது பணியாளர்கள் அதற்கான மொழிபெயர்ப்பு உரையாளர் ஒருவரை அல்லது மொழிபெயர்ப்பு வரைவினை நீங்கள் பெறுவதற்கான ஏற்பாட்டினைச் செய்து தருவார்கள்.

நீங்கள் ரொறொன்ரோவுக்கு புதியவராக வந்த ஒருவராக இருந்து, உங்களுக்கு மேலதிகமான உதவி தேவைப்பட்டால், TDSB பாடசாலைச் சபைக்குரிய மூன்று புதுவரவாளர் வரவேற்பு நிலையங்களில் (Newcomer Reception Centres) ஏதாவது ஒன்றுக்கு நீங்கள் போய் உதவி பெறலாம். இவ்வாறான புதுவரவாளர் வரவேற்பு நிலையங்களில், புதுவரவாளர்களாக இருக்கும் வயது வந்தவர்கள், இளைஞர்கள், முதியோர் மற்றும் வலுவீனங்கள் உடையோர் ஆகியவர்களுக்கு இலவசமாகக் குடியமர்வுச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

புதுவரவாளர் வரவேற்பு நிலையங்களில் கடமையாற்றும் பணியாளர்கள் பின்வரும் விடயங்களில் உங்களுக்கு உதவ முடிகிறது: குடியுரிமைக்கான வகுப்புகள், வீட்டு வசதி, மொழியறிவு பெறுதல், கல்வித் திட்டத்தின் ஊடாகச் செல்லும் வழி காணுதல். வாழ்வுக்கான தொழில் துறைத் தகவல், வேலை தேடுவதற்கான உதவி, வழிநடத்துநர் பணி, சட்ட உதவிகளுக்கான தகவல், சமூக சேவை வசதிகள், நிதி கையாளும் முறை மற்றும் வரவு செலவு திட்டம் அமைத்தல், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைக் குடியிருப்போர் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், தொழிற் திறன்களை உயர்த்தும் வேலைப் பட்டறைகள் ஆகியவற்றுடன் மொழிபெயர்ப்பு வரைவு மற்றும் மொழிபெயர்ப்பு உரையாளர் உதவி.

உங்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாக நாங்கள் இங்கு இருக்கிறோம்! TDSB பாடசாலைச் சபைக்கும் ரொறொன்ரோவுக்கும் புதுவரவாளர்களாக இருக்கின்றவர்களுக்கு என்று நாங்கள் வழங்கும் ஆதார உதவிகள் மற்றும் சேவைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் இந்த இணையத் தளத்தினைக் காலத்துக்குக் காலம் புதுப்பித்துப் புதிய தகவலினையும் சேர்த்து வருவோம். எனவே தயவுசெய்து மீண்டும் இத்தளத்துக்கு வருகை தாருங்கள்.

© 2014 Toronto District School Board  |  Terms of Use  |  CASL